அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழிகாட்டுதலின் படி 2024ல் தேர்தலில் பணியாற்றுவோம். என திமுக புதிய நிர்வாகிகள் முடிவு
ஷ்யாம் நீயூஸ்
23.08.2022
அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி வழிகாட்டுதலின் படி 2024ல் தேர்தலில் பணியாற்றுவோம். என திமுக புதிய நிர்வாகிகள் முடிவு
தூத்துக்குடி 15வது திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட மாநகர திமுக புதிய நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகப்படுத்தி அனைவரையும் கனிமொழி எம்.பி வாழ்த்தி பேசினார்.
இந்நிலையில் 44வது வார்டு திமுக புதிய நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் ஆறுமுககிளி தலைமை வகித்தார். பிரையண்ட்நகர் பகுதி திமுக செயலாளரும் நகர அமைப்பு குழு தலைவருமான ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கூறுகையில் வரும் 2024ல் பாரளுமன்ற தேர்தலில் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழிகாட்டுதலின் படி பிரையண்ட்நகர் பகுதி திமுகவிற்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுத்து நமது ஒற்றுமையை காட்டுவதற்கு களப்பணியாற்ற வேண்டும் என்றார்.
வட்டச்செயலாளர் சுப்பையா, வட்டப்பிரதிநிதிகள் மணி, வெற்றிராஜன், சுடலை குமார், கிறிஸ்டோபர், சரவணன், துணைச்செயலாளர்கள் சத்தியபாலன், சுப்பம்மாள், முருகன், ராஜன், பொருளாளர் சம்சுதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.