ஷ்யாம் நியூஸ்
04.08.2022
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களது எதிர்கால தவணைகளை உறுதி செய்வதற்கான முக்கிய படியான eKYC செயல்முறையை (eKYC process) முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி உள்ளது.
நலிவடைந்த விவசாயிகளுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் நிதியாண்டில் 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 11-வது தவணை மற்றும் அடுத்தடுத்த தவணைகளாக விவசாயிகள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களில் ரூ.2,000 நிதி பெறுவதற்கு, PM Kisan Samman Nidhi-க்கான Kyc ப்ராசஸை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கிசான் திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் 6000 ரூபாய் பெற வேண்டுமெனில் ஆன்லைனில் e-KYCஐ முடிக்க வேண்டும். விவசாயிகள் அருகே உள்ள பொது சேவை மையங்கள், இ-சேவை மையம் வாயிலாக e-KYC எளிதாக முடித்துக்கொள்ளலாம். இதுபோக நீங்களாகவே ஆன்லைனில் e-KYC முடிக்க முடியும்.
PMKISAN போர்ட்டலில், OTP அடிப்படையில் eKYC ப்ராசஸை முடிக்க முடியும். பயோமெட்ரிக் அடிப்படையில் eKYC முடிக்க விரும்பும் யூஸர்கள் அருகிலுள்ள CSC மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும். OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.. என்று வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.