தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.
ஷ்யாம் நீயூஸ் 31.08.2022 தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விநாயகர் சதுர்த்தி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை பட்டர் செல்வம் என்ற கல்யாணசுந்தர சிவாச்சியார் மூலம் நான்குகால யாகசாலை பூஜை நடைபெற்று போத்தி விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் தரிசனம் செய்தனர். விழாவில் தொழிலதிபர்கள் மணி, தெய்வநாயகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மகா கும்பாபிஷேக விழாக்குழு தலைவர் தர்மகர்த்தாவுமான ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்ச...