விளாத்திகுளத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு, குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஷ்யாம் நியூஸ்
06.04.2022
விளாத்திகுளத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு, குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு விளாத்திகுளம் ஒன்றிய பெருங் குழுத்தலைவர் முனிய சக்தி மற்றும் விளாத்திக்குளம் பேரூராட்சி தலைவர் அயன் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் பால ஹரிஹர மோகன், வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டார்கள். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் சரளாதேவி வரவேற்பு மற்றும் திட்டப்பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் திட்டப்பணிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பொறுப்பு கடமைகள் பற்றி எடுத்துரைத்தார் . இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட வட்டார மேற்பார்வையாளர் , கண்காணிப்பாளர்கள், திட்ட பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.