ஷ்யாம் நியூஸ்
19.04.2022
மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை மோதல் - சரமாரி தாக்குதலால் பக்தர்கள் முகம் சுழிப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது.
சித்திரை பௌர்ணமி தினத்தையொட்டி வரதராஜ பெருமாள் பாலாற்றங்கரையில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி கைகலப்பாக மாற, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல வடகலை தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி நக்கீரன்)