ஷ்யாம் நியூஸ்
19.04.2022
சி பா சிவந்தி ஆதித்தனார் 9ம் ஆண்டு நினைவஞ்சலி மேயர் ஜெகன் பெரியசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி வி இ சாலையில் காமராஜர் சிலை அருகில் சி பா சிவந்தி ஆதித்தனார் 9 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தெஷணமாற நாடார் சங்க முன்னால் நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்ட திருஉருவ படத்திற்க்கு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்செய்திநாளேடுகள் தினத்தந்தி மற்றும் மாலைமலரின் உரிமையாளராகவும், முதன்மை தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்.தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் - கோவிந்தம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன் சிவந்தி ஆதித்தனார் ஆவார். கைப்பந்தாட்டத்தில் மிகுந்த முனைப்பு உடையவர். இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.2008 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இலக்கியம் மற்றும் கல்விக்கு வழங்கப்பட்டது.இவ்விழாவில் பெரு நகர செயலாளர் ஆனந்த சேகரன் வணிகர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு வழக்கறிஞர் வாரியார் காங்கிரஸ் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் வழக்கறிஞர் டேவிட் பிரபாகரன் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்கொடி சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புத ராஜ் , நகர செயலாளர் உதய சூரியன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் செங்குட்டுவன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்