ஷ்யாம் நீயூஸ்
23.04.2022
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு.
தூத்துக்குடி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் திமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று பணி செய்து வருகிறார். இந்நிலையில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணிய கோரிக்கை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி பதிலுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி முதலைமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் சுதன்கீலர் உடனிருந்தனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தாமதமாக நடைபெற்ற பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவாக பணிகள் செய்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளார். மாநகர் முழுவதும் பசுமையான நகரமாக இருப்பதற்கு எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. பிரதான சாலைகள் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு சில இடங்களில் பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்திற்குள் சாலைகள் பணி முழுமையாக முடிக்கப்பட்டு தூய்மையான மாநகரமாக விளங்குவதற்கான பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. இதை ஒழுங்குப்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறியப்பட்டு மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் புதிய தார்சாலை குறிப்பாக எஸ்எஸ் மாணிக்கபுரம், கீழ ரெங்கநாதபுரம், அண்ணாநகர், பகுதிகளில் போடப்பட்டுள்ளது. இது போல் போர்கால அடிப்படையில் பணிகள் மக்கள் நலன் கருதி விரைவாக நடைபெற்று வருகின்றன ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகள் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். விரைவில் அண்ணாநகர் 12வது தெரு பகுதியை திறந்துவிட்டால் புதிய பேருந்துநிலையம் 4ம் கேட் பகுதி வழியாக வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், பி அண்டி காலணி, மடத்தூர், வரை செல்லலாம். அதற்கேற்றாற் போல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் அதிரடி நடவடிக்கையால் ஆமை வேகத்தில் நடைபெற்ற அனைத்து பணிகளும் அசுர வேகத்தில் நடைபெறுகிறது.