ஷ்யாம் நியூஸ்
04.04.2022
உலர் சாம்பல் இனி இலவசம் இல்லை மின் கட்டண உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் கழிவு பொருள்தான் உலர் சாம்பல் அது தற்போது வரை உலர் சாம்பல் மூலம் செய்யும் செங்கல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கி வந்தது தமிழக அரசு செலவினங்களை குறைக்கும் விதமாகவும் நுகர்வோர் மீது மின் கட்டண சுமையை உயர்த்தாமல் இருக்கவும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் கழிவுப் பொருளான உலர் சாம்பல் இனி கட்டணம் கொடுத்து வாங்க வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளது இதுவரை இலவசமாக வாங்கி தொழில் செய்த உலர் சாம்பல் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று அனல்மின் நிலைய வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் மற்றும் மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும் என உலர் சாம்பல் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள் தூத்துக்குடி தெர்மல் மின் உற்பத்தி நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ண குமாரிடம் மனு அளித்தனர் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது தமிழகம் முழுவதும் உலர் சாம்பல் இலவசமாக கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இதனால் 1500 நிறுவனங்களுக்கும் அதிகமாக செங்கல் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கி உள்ளது என்றும் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை இழந்துளளனர் என்றும் தெரிவித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர் மின்துறை அமைச்சகத்திடம் கோரிக்கைகளை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார் மற்றும் தற்போது உலர் சாம்பல் பெற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை வேண்டுமானால் 631 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.