ஷ்யாம் நியூஸ்
19.04.2022
தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சாலை பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு ஆட்சியர் கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.04.2022) சாலை பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, நம் பள்ளி நம் பெருமை ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், வட்டாட்சியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.