டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஷ்யாம் நீயூஸ்
29.04.2022
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்ததன் பேரில் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே. வெங்கடேசன் (மாவட்ட தலைவர் )தலைமை தாங்கினார் சீனிவாசன் (மாவட்ட செயலாளர் )கண்ணன் (மாவட்ட தலைவர் தென்காசி) ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார் மரகதலிங்கம் (மாநில துணைத்தலைவர் )முருகானந்தம் (மாநில துணைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் மாநில பொதுச் யலாளர் கணேசன் மாநில அமைப்பு செயலாளர் சாமிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.