ஷ்யாம் நியூஸ்
19.04.2022
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். நலசங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாகவும் முத்தம்மாள் காலனியில் அடிப்படை வசதிகள் குறித்தும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.குறிப்பாக 5வது தெரு கிழக்கு மற்றும மேற்கு 9வது தெரு 10 வது தெரு 6வது குறுக்கு தெரு 2வது தெரு குறுக்கு ஆகிய தெருக்களில் தார் சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.. இதற்கு பதில் அளிக்கும்போது பாதாள சாக்கடை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் .1வருட காலத்துக்குள் முடிவடையும் என மேயர் பதில் அளித்தார்.மழை நீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்.இந்த நிகழ்வில் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் C.தங்கராஜா தலைவர் மற்றும் C.சண்முகசுந்தரம் பொருளாளர் N.சண்முகராஜ் துணைத் தலைவர் 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமிபொன்ராஜ் MC தூத்துக்குடி மாநகராட்சி தென்மண்டல தலைவர் வழக்கறிஞர் A.பாலகுருசாமி MC MA.BL வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.