முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா!

 ஷ்யாம் நீயூஸ்

23.04.2022

பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா!

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான பயிற்சி முகாம்தொடக்க விழா நடைபெற்றது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின், மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை தொழிலாளர்கள் சுய உதவி குழு பெண்  பயனாளிகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் சமுதாய கூடத்தில் வைத்து  தொடக்கவிழா நடைபெற்றது.

பயிற்சி முகாமிற்கு மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

ராயப்பன் முன்னிலை வகித்தார்

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான  டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்துகொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார் 

இதில் நலிவடைந்து வரும் பனை தொழிலை பாதுகாக்க வேண்டும். பனை  தொழிலை மேம்படுத்த,பனை  தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வழங்க வேண்டும். பனைத் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டு வரும் வறுமையை ஒழிக்க தற்போது பெற்றுள்ள கடன் தொகையை முறையாக பயன்படுத்தி பெண்கள் சுயதொழில் தொடங்கி மேம்படுத்தி. கடனை முறையாக செலுத்தி புதிய, பெரிய  அளவில் கடன்களை பெற்று தொழிலை விரிவு படுத்த வேண்டும், மேலும் பனையை பாதுகாக்க வேண்டும் செங்கல் சூலைகளுக்காக பனை மரங்கள்  வெட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும்  .பொதுமக்கள் தானாக முன்வந்து பனை  விதைகளை விதைக்க வேண்டும்   என கூறினார். 

மேலும் இதில் அரசுத் துறை வல்லுநர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள்,பயிற்சி அளித்து வருகின்றனர்.இதில்    அரசு திட்டத்தின் கீழ் மானிய தொகை அளவு, மானியம் விண்ணப்பிக்கும் முறை, தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய உதவி, திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குறிப்பிட்ட சில தொழில்கள், தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள், வனம், சார்ந்த தொழில்கள்,கைமுறை காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள் சார்ந்த தொழில்கள், வேளாண் சார்பு மற்றும் உணவு பொருள்கள் சார்புத் தொழில்கள், பாலிமர் மற்றும் ரசாயன சார்ந்த தொழில்கள், பொறியியல் மற்றும் மரபு சாரா எரிசக்தி சார்ந்த தொழில்கள், சேவை மற்றும் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்கள், தகுதியற்ற தொழில்கள் பட்டியல், இத்திட்டத்தில் இரண்டாம் முறை கடன் தொகை பெறுவதற்கான வழிவகைகள் கூறப்பட்டன. இப்பயிற்சியில் பனைத் தொழிலாளர்கள் சுய உதவிக்குழு பெண்கள் 60 பேர் கலந்துகொள்கிறார்கள் தொடர்ந்து பயிற்சி பத்து நாட்கள் நடைபெறுகிறது. இப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு மானிய தொகை வழங்கப்படுகிறது முன்னதாக லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர் சுதாகரன் நன்றி கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...