தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என டாஸ்மாக் ஏஐடியுசி சங்கம் தெரிவித்துள்ளது .தூத்துக்குடியில் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெறுகிறது
ஷ்யாம் நீயூஸ்
20.04.2022
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என டாஸ்மாக் ஏஐடியுசி சங்கம் தெரிவித்துள்ளது .தூத்துக்குடியில் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெறுகிறது
வரும் 25ம் தேதி டாஸ்மாக் ஏஐடியூசி மற்றும் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்க உள்ளனர் கடந்த 19 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மீண்டும் கடையில் பணியமர்த்த வேண்டும் பணி ஒரு எழுத்தர் ஓட்டுனர பணிக்கு விரும்பும் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும் கேரளாவை போன்ற நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் மற்றும் முழுமையான கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் என்றும் மற்றும் பல கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஏஐடியுசி பணியாளர் சங்கம் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர் இதில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஏஐடியூசி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.