தூத்துக்குடியில் மழை நீர் எங்கும் தேங்கக்கூடாது சேலஞ்ச் ஆக எடுத்து செயல்பட வேண்டும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!
ஷ்யாம் நியூஸ்
12.04.2022
தூத்துக்குடியில் மழை நீர் எங்கும் தேங்கக்கூடாது சேலஞ்ச் ஆக எடுத்து செயல்பட வேண்டும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!
தூத்துக்குடியில் மழை நீர் எங்கும் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சியில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் சேலஞ்ச் எடுத்து செயல்பட வேண்டும் என்று தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார் .
கடந்த ஆண்டு பெய்த கன மழையில் தூத்துக்குடியின் தெருக்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது தூத்துக்குடி மக்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாகினர் இதனை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இருமுறை தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் இன்று நடந்த தூத்துக்குடி மாமன்ற ஐந்தாவது கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அமிர்த கணேசன் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் கேள்விகளுக்கு பதிலளித்தார் இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தற்போது தூத்துக்குடியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் இருப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அதனை உடனடியாக வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனை மாமன்ற உறுப்பினர்கள் ஒரு சேலஞ்ச் ஆக எடுத்து செயல்படுத்தி முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.