மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வடிகால், தார் சாலை அமைக்க கோரி சிபி எம் கட்சி சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது*.
ஷ்யாம் நீயூஸ்
27.04.2022
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வடிகால், தார் சாலை அமைக்க கோரி தூத்துக்குடி சிபி எம் கட்சி சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.தூத்துக்குடி மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர் மற்றும் ராஜிவ் நகர் ஆகிய பகுதிகள் 2015 முதல் ஆண்டு தோறும் மழைநீரால் கடும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அன்னை தெரசா நகர் பால்பாண்டி நகர் மெயின் (சர்ச் அருகில்), கதிர்வேல் நகர் ( csi சர்ச் பின்புறம் ), ராஜீவ் நகர் 6 வது தெரு, ராஜீவ் நகர் 9 வது தெரு (பிள்ளையார் கோவில் அருகில் ), ராஜீவ் நகர் 10 வது, 11 வது தெரு, அன்னை தெரசா நகர் 2 வது மற்றும் 3 வது தெரு, பால்பாண்டிநகர் 5 வது தெரு, புஷ்பா நகர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழைநீர் தேங்குகிறது. இந்த சாலைகள் ஏற்கனவே பள்ளமான சாலையாக உள்ளது இந்த சாலை தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை மழைக்காலத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் போது பழுதாகி விடுகிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைத்து தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும்;
மேலும் 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கழிவுநீர்வாகனம் மூலம் மாதம் இருமுறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு முத்து மாநகரச்செயலாளர் ராஜா ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு முத்து மாநகர் குழு உறுப்பினர் காஸ்ட்ரோ.
மாரியப்பன்.சேகர்.தங்கையா.முருகேசன்.ஜெர்ஸன் மகாராஜா.உட்பட பலர் கலந்து கொண்டனர்...