ஷ்யாம் நீயூஸ்
25.04.2022
தூத்துக்குடியில் சாலை விழிப்புணர்வு கலெக்டர் எஸ்.பி மேயர் ஆணையர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி சாலை விழிப்புணர்வு குறித்து போக்குவரத்து முககவசம் அணிதல் செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தில் செல்லாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குரூஸ்பர்னாந்து சிலை முன்பு நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி. பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் விழிப்புணர்வை வாகனஓட்டிகளுக்கு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து வட்டார அலுவலர் விநாயகம், ஆய்வாளர் பெலிக்ஸ், தாசில்தார் செல்வகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கட், பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.