ஷ்யாம் நீயூஸ்
25.04.2022
தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகுசிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தூத்துக்குடி டூவிபுரம் சேகர தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி ஊரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், ஜெசுராஜன் செல்வக்குமார், கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர்(பொறுப்பு) சார்லஸ், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றார். ஆசிரியை பெல்சிபாய் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், சண்முகையா எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
விழாவில், பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் பேசியதாவது, தூத்துக்குடி&நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட இந்த பள்ளியை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக நாங்கள் நடத்தி வருகிறோம். இதற்கு திருமண்டலத்தினர், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் அனைவரும் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளனர்.
பள்ளியில் மாணவர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறை எடுக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் அடிப்படைக்கல்வி சிறப்பாக அமைந்து விட்டால் அவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைந்திடும் என்ற அடிப்படையில் கல்வி பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
சிறுவயதிலேயே மாணவ, மாணவியர்கள் கலெக்டராக, ஐ.பி.எஸ் அதிகாரியாக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக, தலைசிறந்த வல்லுநராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் கல்வியோடு பிற பயிற்சிகளை அளிப்பதோடு, சமூகநலன் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறோம்.
எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துவரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் மிகுந்த நன்றி கடன்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்து, உங்களின் அன்பும், ஆதரவும் என்றும் தொடர்ந்திடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதில், மாநகராட்சி கவுன்சிலர் காந்திமணி, தொழில்அதிபர் ஆறுமுகப்பாண்டியன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தனசேகரன், தனசிங், டெய்சிதெபோராள், இம்மானுவேல், சேகர பொருளாளர் தினகரன் ஜெயசிங், பண்டாரம்பட்டி ஊர் தலைவர்கள் குருநாதன், பிரதீப், பெற்றோர் ஆசிரியர் கழக திரவியராஜ், சேகர உறுப்பினர்கள் பொன்ராஜ், கனிஷ்டன், பயர் சூப்பர்வைசர் சுஜின், பண்டாரம்பட்டி ராஜ்குமார், காளீஸ்வரன், வன்னியராஜ், தலைமையாசிரியர்கள் சந்திரா, பியூலாஞானதங்கம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டு கால கொரோனோ ஊரடங்கிற்கு பிறகு முதன்முதலாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமையில் ஆசிரியை, ஆசிரியர்கள், ஊர்மக்கள் வீடு வீடாக, வீதி வீதியாக மேள தாளங்கள், வானவேடிக்கை முழங்க சென்று மாணவ, மாணவியர்களை பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தி வரவேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.