ஷ்யாம் நீயூஸ்
21.04.2022
தூத்துக்குடி மாவட்ட நீதிபதியின் புதுமையான தீர்ப்பு. இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு.
தட்டார்மடத்தை சேர்ந்த மூன்று நபர்கள் சண்முகநாதன், இசக்கிமுத்து, பொன்சிங் ஆகியோர் தட்டார்மடம் வியாபாரிகளிடம் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் தட்டார்மடம் மெயின் ரோட்டில் இருந்த 20 வருட பழமையான மரம் ஒன்றை வெட்டிவிட்டனர் இதை தட்டி கேட்ட வியாபாரி சங்கத்தின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சண்முகநாதன் இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சாத் தான்குளம் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளிவந்த நிலையில் பொன்சிங் என்பவரின் முன் ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு 19.4.22 அன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் மரத்தை வெட்டி சேதப்படுத்திய நபருக்கு ஜாமின் வழங்க ஆட்சேபனை செய்தார் மேலும் முன்ஜாமீன் வழங்கும்பட்சத்தில் மரம் நட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு மாவட்ட நீதிபதி சுமதி பொன்சிங் ஒரு மாதத்திற்குள் தட்டார்மடம் ஊரில் பத்து மரங்களை நடவேண்டும் என்று உத்தரவிட்டார்..
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சுமதியின் புதுமையான உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் இயற்க்கை ஆர்வலர்கள் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளானார்..