ஷ்யாம் நியூஸ்
19.04.2022
தூத்துக்குடி மாநகராட்சி திமுக ,அதிமுக வேட்பாளர் மீது பாஜக வழக்கு.

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் திமுக சார்பில் சுரேஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அந்த வார்டில் அதிமுக வேட்பாளராக திருச்சிற்றம்பலம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கட்சியை சேர்ந்த உஷாதேவி உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் தனது வேட்பு மனு தாக்களின் போது அளித்த பிரமாண பத்திரத்தில் பல தவறான தகவல்களை சொல்லி விட்டதாகவும், பல குற்ற நடவடிக்கைகளை மறைத்து உள்ளதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி 39 வார்டு பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளரும், மத்திய அரசு வழக்கறிஞருமான வக்கீல் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறுகையில்....
திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தன் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது என பொய்யாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.ஆனால் அவர் மீது C. C.30/2019 இல் உள்ள ஒரு வழக்கு 4/12/2021 யில் முடிவுற்ற நிலையில் அதனை மறுத்துள்ளார்.
அதேபோல் அதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் திருச்சிற்றம்பலம் மீது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் உள்ள கொலை வழக்கை குற்ற வழக்கு எண் 210/2017 மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் வேட்புமனுவில் அவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர்,ஆட்டோ விளம்பரம் உள்ளிட்ட அனைத்து வகையான விளம்பரங்களிலும் தான் பிஏ படித்துள்ளதாக பொய்யாக விளம்பரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி புகார் கொடுத்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 39-வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு எண் 41/2022 விசாரணைக்கு வர உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர் உஷாதேவி, பாஜக ஐடி அணி செயலாளர் விக்னேஷ், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன், கிழக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் கௌரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.