தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
ஷ்யாம் நியூஸ்
20.04.2022
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி அதிமுகவின் உட்கட்சி அமைப்புத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஏப் 16ம் தேதி அதிமுக 3ம் கட்ட அமைப்பு தேர்தல் தனியார் ஹோட்டலில் வைத்து மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமுரளி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தி அதன் விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தேர்வு செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி செயலாளராக பொன்ராஜ், தெற்குப் பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் ராஜா, மத்திய வடக்கு பகுதி செயலாளராக ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி செயலாளராக நட்டார் முத்து, கிழக்குப் பகுதி செயலாளராக சேவியர், மேற்கு பகுதி செயலாளராக முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளராக மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளராக காசிராஜன், உடன்குடி ஒன்றிய செயலாளராக தாமோதரன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜயகுமார், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளராக செம்பூர் ராஜ்நாராயணன், சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளராக சௌந்தரபாண்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளராக இராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திருச்செந்தூர் நகர செயலாளராக மகேந்திரன், காயல்பட்டினம் நகர செயலாளராக டாக்டர் காயல் மளொலானா உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆறுமுகநேரி பேரூராட்சி செயலாளராக ரவிச்சந்திரன், ஆத்தூர் பேரூராட்சி செயலாளராக சோமசுந்தரம், கானம் பேரூராட்சி செயலாளராக செந்தமிழ் சேகர், நாசரேத் பேரூராட்சி செயலாளராக கிங்ஸ்லி ஸ்டார்லிங், தென்திருப்பேரை பேரூராட்சி செயலாளராக ஆறுமுகநயினார், உடன்குடி பேரூராட்சி; செயலாளராக கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயலாளராக காசிராஜன், சாயர்புரம் பேரூராட்சி செயலாளராக துரைசாமி ராஜா, பெருங்குளம் பேரூராட்சி செயலாளராக வேதமாணிக்கம், ஏரல் பேரூராட்சி செயலாளராக அசோக்குமார், சாத்தான்குளம் பேரூராட்சி செயலாளராக குமரகுருபரன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயலாளராக செந்தில் ராஜகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனை பண்டாரவிளையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் வாழ்த்து கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்து அவரிடம் கேட்ட போது வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுவதாக கூறினார்.
இதே போல் பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள சேவியர், முருகன், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியனை சிதம்பரநகரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.