பெட்ரோல் டீசல் விலை மற்றும் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஷ்யாம் நியூஸ்
04.04.2022
பெட்ரோல் டீசல் விலை மற்றும் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் தலைமையில் பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது அவர் கூறுகையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் அறிவுருத்தலின்படியும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் அவர்களின் வழிகாட்டுதல் படியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை வாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். ஆர்ப்பாட்த்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ் தனுஷ்கோடி, மாநில செயலாளர் சிந்தியா ஜெயக்குமார், OBC மாவட்ட தலைவர் SS கணேஷ், ஊடக பிரிவு மாநில பொறுப்பாளர் முத்துமணி, டிசிடியு மண்டல தலைவர்கள் வில்லியம் பெர்னாண்டோ, அருண் தேவராஜ், ராஜப்பா, K. கண்ணன் மீனவரணி தலைவர் கென்னடி ராஜ், ஊடக பிரிவு சுந்தர்ராஜ், குமார், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கார்த்திக், R. கண்ணன், பாலசுப்ரமணியன். ஜாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.