முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் மாவட்ட அதிகாரி ரதிதேவி வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ்

21.04.2022

பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் மாவட்ட அதிகாரி ரதிதேவி வேண்டுகோள்.


மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பூமி பாதுகாப்பு  தினவிழாவில் மரங்கள் நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் என மாவட்ட அதிகாரி  ரதிதேவி  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

            

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.             நிகழ்ச்சிக்கு மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர்  எஸ் பானுமதி முன்னிலை வகித்தார். முன்னதாக தையல் பயிற்சி மாணவி செல்வி. மெபிலா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட அதிகாரி ரதிதேவி கருத்துரை  வழங்கினார்.மேலும் அவர் கூறியதாவது பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து தென் துருவப் பனிப் பிரதேசம் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உருகுவதன் மூலம் கடலில் நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்தும் செயல்களை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். காற்றை தூய்மைப்படுத்தும் காடு வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும். 

                  சூரிய ஒளியிலிருந்து வரும் அகசிவப்பு கதிர், புறஊதாக் கதிர்களின் அபாயத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் மெலிந்து அதில் துளை ஏற்படும் அபாயத்தை பாதிக்கக் கூடிய இரசாயன மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது அல்லது தவிர்ப்பது மிக அவசியம் . மேலும் மனிதர்களாகிய நமக்கு கிடைத்துள்ள இந்த பூமியை பாதுகாக்க முன்வரவேண்டும் பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது இந்த பூமியும் இனிது, அதை காப்பது அதைவிட இன்பம். இந்த பூமியை காக்க பூமி வெப்பமயமாதலை தடுக்க அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும் என மாவட்ட அதிகாரி ரதிதேவி கூறினார். முடிவில் தையல் பயிற்சி மாணவி செல்வி. ரிபான்சி நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்று ஓரங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பறவைகளின் உணவுக்கு பயன்படும்  பழ வகை   மரக்கன்றுகள் 100 நடப்பட்டது

           இதில் தையல் பயிற்சி மாணவிகள், வளர் இளம் பெண்கள். மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் பணியாளர்கள் செய்தனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...