ஷ்யாம் நீயூஸ்
21.04.2022
தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளரை தீயணைப்புபடையினர் மீட்டனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி மெயின் ரோட்டில் பிரபல தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி(CEO)யான கேரளா திருச்சூரை சேர்ந்த ரூபினோ ஜோஸ்(வயது35) நேற்று மாலை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிறுவன வளாகத்திலுள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புப்படையினர் நிலைய அலுவலர் ஜோ சகாயராஜ் தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபினோ ஜோஸை பத்திரமாக மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து அவருக்கு மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.