தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஷ்யாம் நியூஸ்
16.04.2022
தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவிலில் சித்ராபௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி ஆன்மிக சிறப்பு பெற்ற பாகம்பிரியாள் அம்பிகை உடனுறை சங்கரராமேஸ்வரர் சிவன் கோவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சிவன்கோவிலில் சித்திரைத் பெருந்திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. யானை மீது கொடி ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விநாயகர் வழிபாடுடன் கொடியேற்றமும், தொடர்ந்து தேர்க்கால் முகூர்ந்த விழாவும் நடைபெற்றது.
திருவிழாவில் தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், சுவாமி அம்பாள் காலை மற்றும் மாலையில் யானை, குதிரை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும், ஆலய மண்டபத்தில் பக்தி சொற்பொழிவுகள், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் பெருந்திருவிழா நேற்று காலை சிறிய தேரில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீமுருகப்பெருமானும், பெரிய தேரில் சுவாமி ஸ்ரீசங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளி அதனைத்தொடர்ந்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழாவில் தேருக்கு முன்பாக யானை, ஒட்டகம் அணிவகுத்தும் சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட கலைஞர்கள் பாரம்பரிய கிராமிய சிறப்புடன் நடனமாடியது சிறப்புமிகு காட்சியாகும்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருக்கோவில் மற்றும் விழாக் குழுவினர் சார்பில் ரதவீதிகளிலுள்ள திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 504 மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேரோட்ட பவனி விழா குழுவினரான முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, மற்றும் ஆறுமுகம், சாந்தி, சோமநாதன், கங்காராஜேஷ், சந்தனராஜ், கோபால், மாரிமுத்து, நெல்லையப்பன், திருவனந்தல்மாரியப்பன், கல்யாணசுந்தரம், முத்துக்குமாரசுவாமி, கார்த்திகேயகுமார், வைரவநாதன், ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்தினர், செல்வம்பட்டர், விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.