ஷ்யாம் நீயூஸ்
21.04.2022
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க..ஸ்டாலின் பதவியேற்றபின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஓவ்வொரு துறை அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரண்டாவது முறையாக தனது துறையின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்து கேள்வி பதிலுக்கு பின் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக தனது துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை சமூக நலத்துறை இயக்குநர் மற்றும் செயலாளர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், அதிஷ்டமணி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார். ரவீந்திரன், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னப்பாண்டியன், செல்வராஜ், சின்னமாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரி தங்கம், உமாதேவி, மணி, அன்பழகன், துணைச்செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், ஜேசையா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அணி செயலாளர்கள் டேனி, முருகஇசக்கி, அருண்குமார், ஜெபக்கனி, துணைச்செயலாளர்கள் பால்ராஜ், ஆர்தர்மச்சாது, பால்மாரி, செல்வி, அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், ராஜ்குமார், கவுன்சிலர்கள் வைதேகி, மெட்டில்டா, பவாணி மார்ஷல், ஜெயசீலி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, முத்துவேல், ராஜதுரை, சரண்யா, ஜாக்குலின் ஜெயா, சுப்புலட்சுமி, தெய்வேந்திரன், கந்தசாமி, விஜயகுமார், ரிக்டா, சோமசுந்தரி, பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், செல்வகுமார், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் நேரிலும் சிலர் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தனர்