முதியோர் பெண்கள் வாழ்வாதாரம் உயரவேண்டும்.தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அறக்கட்டளை துவக்க விழாவில் பேச்சு!
ஷ்யாம் நியூஸ்
15.04.2022
முதியோர் பெண்கள் வாழ்வாதாரம் உயரவேண்டும்.தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அறக்கட்டளை துவக்க விழாவில் பேச்சு!
தூத்துக்குடி முத்துநகர் மக்கள் எழுச்சி அறக்கட்டளை சார்பாக கொரோனா காலக் கட்டத்தில் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி அன்னத்தாய் மஹாலில் நடைபெற்றது.
நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பல்வேறு வகையில் சாதனை படைத்தவர்களுக்கு காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கார், அப்துல்கலாம், வஉசி, குரூஸ்பர்னாந்து ஆகியோர் பெயரில் விருது வழங்கி பேசுகையில்
மக்கள் பணி செய்வது தான் எங்களுக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி மக்களுக்கான பணிகளை தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. என்ற முடிவோடு நாங்கள பணியாற்றி வருகிறோம். மாநகர மக்களுக்காக இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் விசாரித்த போது கொரோனா காலக்கட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பல்வேறு தரப்பினருக்கு உணவு உடை என பல்வேறு உதவிகளை செய்ததை கூறினார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவிற்கே முன் உதாரணமாக செயல்படும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுப்பு ஊசி செலுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை தடுப்பதற்கு தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டு கொண்டதின் அடிப்படையில் மக்கள் அதை கடைபிடித்ததால் இன்று கொரோனா முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசும் மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கின்றன. அதையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முதியோர் பெண்கள் வாழ்வாதாரம் உயர புதிய அறக்கட்டளையை மேயர் துவக்கி வைத்தார்.
விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷிலின், திமுக வட்டச்செயலாளர் சேகர், தமிழக மாற்று திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயராஜ், பசுமை மரம் வளர்ப்போர் அறக்கட்டளையை சேர்ந்த மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், திமுக பிரமுகர் சீனிவாசன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், முத்துநகர் மக்கள் எழுச்சி அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல், மாநகராட்சி சுகாதார ஆய்வர்ளா ஹரிகணேஷ், உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.