ஷ்யாம் நியூஸ்
19.04.2022
தூத்துகுடியில் ஒன்றிய அரசை கண்டித்து சிபி எம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹிந்தி எதிர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சிபி எம் மாவட்ட குழு உறுப்பினர் எம்எஸ். முத்து தலைமை வகித்தார்.சிபி எம் மாவட்ட செயலாளர் கே.பி ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சங்கரன் , மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் மாநகர் குழு உறுப்பினர்கள்ஆறுமுகம், காஸ்ட்ரோ, முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், குமாரவேல், மற்றும் ஆறுமுகம்,பெருமாள், ஆனந்த், பூவலிங்கம்.அலாசியஸ்.முருகன்,டென்சிங்,கிஷோர், நாகராஜ் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.