முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

 ஷ்யாம் நியூஸ்

13.04.2022

மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு


  தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

     தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்; ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

      கூட்டத்தில் தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பொன்னப்பன், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், ராமர், கந்தசாமி, வைதேகி, ராஜதுரை, ராஜேந்திரன், முத்துவேல், சுயம்பு, விஜயகுமார், சுரேஷ்குமார், நாகேஸ்வரி, இசக்கிராஜா, பச்சிராஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின்; மகேஸ்வரி, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மும்தாஜ், சிபிஎம். முத்துமாரி, மதிமுக ராமுஅம்மாள், காங்கிரஸ் சந்திரபோஸ், கற்பகக்கனி, உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சிலர் தங்களது பகுதியில் செய்த பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி நன்றியை தெரிவித்து பேசினார்கள். சில கேள்விகளுக்கு ஆணையர் சாரூஸ்ரீ, செயற் பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா ஆகியோர் பதிலளித்தனர்.

     உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் ஜெகன் பெரியசாமி  பேசுகையில், பொதுமக்களுக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிர்வாக செலவிற்காகவும், மாநகராட்சியின் பழைய கடன்களுக்காகவும் ரூ.226.05 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பொதுமக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்வு 25 சதவீதம் முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநகராட்சியில் முதல் முறையாக லெவிஞ்சிபுரம் வாட்டர் டேங்கிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு பழைய குடிநீர் இணைப்புகளுக்கு பதிலாக புதிய பைப்லைன் வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில் தெருக்குழாய்கள் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், சொத்து வரி உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், திமுக தேர்தல் வாக்குறுதியில் வரிகளை உயர்த்த மாட்டோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் சொத்து வரியை  உயர்த்துவதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.

     பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் அதிமுக உறுப்பினர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்திற்கு காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

     கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன்  மற்றும் கவுன்சிலர்கள் சரண்யா, சோமசுந்தரி, பேபி ஏஞ்சலின், அதிஷ்டமணி, ரெங்கசாமி, , கண்ணன், விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், தனலட்சுமி, ரிக்டா, சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, மெட்டில்டா, பவாணி மார்ஷல், உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

     முன்னதாக கூட்டம் தொடங்கியதும் முன்னாள் அதிமுக நகர் மன்ற உறுப்பினர் அமிர்த கணேசன் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...