தூத்துக்குடியில் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை*
ஷ்யாம் நீயூஸ்
24.04.2022
தூத்துக்குடியில் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்திற்குள் கிரேட் காட்டன்ரோடு கடை மற்றும் லயன்ஸ்டவுன் 2ம் நம்பர் கடை ஆகிய இரண்டு ரேசன் கடைகள் இயங்கி வருகிறது.
இந்த நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் அரசு ரேஷன் கடையில் உள்ள பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கிரேட் காட்டன் ரோடு கடையில் சுயம்புலிங்கம் இதேபோல் லைன்ஸ்டவுன்
இரண்டாம் நம்பர் கடையில் சரவணகுமார் ஆகிய இரு கடை பணியாளர்கள் மகேஸ்வரி மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் மூலம் இரு சக்கர வாகனத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்பு பாமாயில் சீனி உள்ளிட்ட பொருட்களை கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ரேஷன் பொருட்களை கடத்தும் நபர்கள் மீது குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் இந்த இரண்டு கடைகளிலும் பொருட்களை திருடி வெளிச் சந்தையில் விற்கும் இந்த நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.