ஷ்யாம் நீயூஸ்
25.04.2022
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மதுரை அச்சம்பத்தில் இயங்கிவரும் மது இன்ஸ்டிடூட் ஆப்மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனமானது மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் பரிந்துறையின்படி மதுரையில் தபால்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுஸ் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க MIMS நிறுவனத்தின் இயக்குநர் மரு.வெ.பரத் மற்றும் நேச்சுரோபதி மற்றும் யோகாத்துறைத் தலைவர் மரு.மாலினி SD. தலைமையில் மரு.N.சங்கரசுப்பிரமணியன்,மரு.ப.லக்ட்சயா,மரு.ஜெ.லோகநாதன்,மரு.சு.பிரதீபா,மரு.சொ.ஜெயபாலன் மற்றும் மரு.இளங்கோவன் ஆகியோர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி,காந்தி மீயூசியம்,மீனாட்சியம்மன் கோவில்,ஆர்.எம்.எஸ் தபால்நிலையம்மற்றும் டி.எம்.எஸ் தபால் நிலையம் ஆகிய இடங்களில் யோகா வகுப்புகள் நடத்தினார்கள்.தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஆரோக்கிய பழம் கூறும்போது இவர்களின் சுயநலமில்லாத மக்கள் சேவையை பாராட்டுகிறேன், மேலும் இதுபோன்ற மக்கள் பணியை, மக்கள் நல பணியை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும் என்றும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து நமது சங்கம் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன், அதுமட்டுமல்லாது சங்க உறுப்பினர்கள் இதுபோன்ற மக்கள் பணிகளை தென்னிந்தியா முழுவதும் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து இப்பணியை செய்த அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறேன் என்றார்,
இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் பலர் பங்கேற்று பயனடைந்தனர்