வரும் 27ம் தேதி தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் !டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவிப்பு.
ஷ்யாம் நியூஸ்
12.04.2022
வரும் 27ம் தேதி தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் !டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவிப்பு.
டாஸ்மாக் கிட்டங்கியில் பணி புரியும் ஊழியர்களை கடைகளுக்கு அனுப்பாமல் இருப்பதை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் ஏஐடியூசி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ ஐ டி யு சி தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 08 .04 .2022 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றத கூட்டத்தில் டாஸ்மாக் ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ )கட்சியின் மாவட்ட செயலாளர் அமரர் அழகுமுத்து பாண்டியன் அவர்களுக்கு இரங்கல் அனுசரித்தல்
மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கை கள் நிறைவடையாத கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்துக்கான செயல்பாடுகளை உறுதி செய்தல்
கடைகளில் வெள்ளையடித்தல், கொரானா காலகட்டத்தில் வேலி அமைத்தல், கடைகளுக்கான மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் செலவினங்களுக்கு இதுவரை நிதி வழங்காமல் தொழிலாளர்களுக்கு பணம் கஷ்டத்தையும் மன உளைச்சலையும் உண்டு பண்ணுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க கூறுதல்
அவ்வப்போது கடை பணியாளர்களிடம் ஏற்படும் பிரச்சனைகளை சங்கவேற்றுமையின்றி பணத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் பாரபட்சமின்றி தீர்ப்பு காண்பது
எல்லா அரசு அலுவலகங்களிலும் அறிவுலக மேதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் படத்தை அலுவலகத்தில் திறந்து வைக்க மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வற்புறுத்தல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மற்றும் நெல்லை நெப்போலியன் செய்தியாளர்களிடம் கூறியபோது நீண்ட நாள் மது குடோனில் பணிபுரியும் பணியாளர்களை கடைகளுக்கு அனுப்பாமல் தொடர்ந்து சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் மறுத்து வருகிறது இதனை கண்டித்து வரும் 27ம் தேதி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் காளிமுத்து முன்னிலை வகித்தார் சகாயம் நன்றியுரையாற்றினார் மற்றும் ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.