ஷ்யாம் நியூஸ்
14.04.2022
பூஜ்ய நிழல் தினம் தூத்துக்குடியில் மக்கள் கண்டுகளிப்பு
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வை நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் உள்பட மக்கள் கண்டு மகிழ்ந்தனர்
சூரியனால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல் காலையில் அதிக நிளத்தோடு இருந்து உச்சி நேரத்தில் குறையும் பின் சூரியன் மறையும் வரை மீண்டும் நீள்கிறது அதேநேரம் ஓராண்டில் இருமுறை சூரியனால் ஏற்படும் நிழலை உச்சி நேரத்தில் காண இயலாது அவ்வகையில் ஒரு பொருளின் நேர் மேலாக 90 டிகிரி உச்சியில் சூரியன் வரும் நிகழ்வை பூஜ்ய நிழல் தினம் என அழைக்கப்படுகிறது இந்த நிகழ்வு 12.04.202 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் இது குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அந்தோணி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி பொறுப்பாளருமான அந்தோணி, மோகன் ஆகியோர் இதுகுறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர் அறிவியல் இயக்க பொறுப்பாளர் ஆசிரியருமான அந்தோணி கூறுகையில் இந்த வருடம் 10 முதல் 24 வரை இந்த நிகழ்வை காணமுடியும் ஒவ்வொரு பகுதியிலும் துல்லியமாக பார்க்கலாம் செவ்வாய்க்கிழமை 12. 18 க்கு சூரியனால் ஏற்பட்ட பொருளின் நிழல் மேற்காக கீழே விழுந்தது அப்போதே பொருளின் நிழல் தென்படவில்லை இந்த நிகழ்வை கொண்டு சூரியன் இயக்கம் பூமியின் ஆரம் அட்சரேகை அமைப்பை கண்டறியமுடியும் ஆகஸ்ட் மாதம் 18 முதல் செப்டம்பர் 1 வரை மீண்டும் நிகழ்வை காணலாம் என்றார்