ஷ்யாம் நீயூஸ்
30.04.2022
தூத்துக்குடியில் 127 இடங்களில் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி நாட்டுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி தமிழகம் முழுவதும் கொரோன தொற்று கட்டுபடுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ், ஆகியோர் மூலம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில்
மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்ட வயதினர்கள் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பு ஊசியை 60 வார்டுகளிலும் சுமார் 60 ஆயிரம் பேர் வரை செலுத்தாத நிலையில் இருந்தனர். உடனடியாக கொரோனா தடுக்கும் நடவடிக்கையாக மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமணை உள்ளிட்ட 127 இடங்களில் சிறப்பு தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. ஸ்டேட்பேங்க் காலணி ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல இடங்களில் நடைபெற்ற முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.