தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை.
ஷ்யாம் நீயூஸ்
23.04.2022
தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனையை நிகழ்த்தினர். தூத்துக்குடி அருகே தனியார் பள்ளியில் வேர்ல்ட் ஐகான் அவார்ட் சாதனைக்கான ரூபிக் கன சதுரங்கள் மூலம் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், சென்னை ஸ்பா ஜீனியர் கல்லூரி பள்ளியை சார்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவன் சபரீஷ் தக்ஷன் 25 ரூபிக் கன சதுரங்களை (3 X 3 X 3 ) 16.36 நொடியில் செய்து உலக சாதனை புரிந்துள்ளார் இதைப்போல தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவன் ரோஷன் 5 ரூபிக் கன சதுரங்களை 9.11 நொடியில் செய்து தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்துள்ளார். ஸ்கூல் இன்னோவட் அகடமியில் பயின்று வரும் இம்மாணவர்களின் சாதனையை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேர்ல்ட் ஐகான் அவார்ட் அலோசனைக்குழு கமிட்டி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மண்டலத்தலைவர் சேகர் அருண் ஆகியோர் அங்கீகாரம் அழித்து இம்மாணவர்களின் சாதனையை அங்கீகரித்து மாணவர்கள் சபரீஷ் தக்ஷன், ரோஷன் ஆகிய இரண்டு பேருக்கும் மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். சாதனை புரிய காரணமாக இருந்த ஸ்கூல் இன்னோவட் நிறுவனர் மாரியப்பனை பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சிவசேனா கட்சியின் தென்மண்டல தலைவர் கோமதிராஜ், டாக்டர். விக்னேஷ் பொன்னி இசக்கி பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் மெடல்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.