முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் 127 இடங்களில் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 30.04.2022 தூத்துக்குடியில் 127 இடங்களில் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.  மேயர் ஜெகன்  பெரியசாமி பார்வையிட்டார்.    தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி நாட்டுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.     அதன்படி தமிழகம் முழுவதும் கொரோன தொற்று கட்டுபடுத்துவது  குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ், ஆகியோர் மூலம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்ட வயதினர்கள் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பு ஊசியை 60 வார்டுகளிலும் சுமார் 60 ஆயிரம் பேர் வரை செலுத்தாத நிலையில் இருந்தனர்....

திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் கபாடி போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.

 ஷ்யாம் நீயுஸ் 30.04.2022 திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் கபாடி போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.  தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக தொடங்கியது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணிகள் நாளை  ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர். முதல்நாள் போட்டியில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிற்சங்க தலைவர் ராஜு, தொண்டரணி தலைவர் ராஜா, திமுக இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், திமுக வட்டச்செயலாளர்கள் தினகரன், கருப்பசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.   இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அம...

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மழழையர் பள்ளியில் 84 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது

 ஷ்யாம் நீயூஸ் 30.04.2022 தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மழழையர்  பள்ளியில் 84 வது  ஆண்டு விழா கொண்டாடப்பட்டது தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா வித்யாலயம் மழழையர்  பள்ளியில் இன்று 84 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மழழையர்  பள்ளியில் பயின்று வரும் எல்.கே.ஜி ,யு.கே.ஜி குழந்தைகள் நடைபெற்ற டான்ஸ்,மாறுவேடம்,பாடல் என பல  போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிபடுத்தினர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு!

 ஷ்யாம் நீயூஸ் 30.04.2022 தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு! தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் செயல்பட்டு வரும் திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளரும், தூத்துக்குடி மாவட்டம் மண்டல அலுவலர் ஊரக வளர்ச்சி துறை (பொறுப்பு) கவிதா ஆய்வு செய்தார். ஒட்டப்பிடார சட்டமன்ற மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அலகு உற்பத்தி செய்யப்படும் உர அலகினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணி செய்யும் பணியாளர்களிடம் கலந்துரையாடினார். அதன் பின்னர், ஊராட்சி அலுவலகம் சென்று அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொது மயானத்தில் மின்சார எரியூட்டி தகனம் இடத்தினை பார்வையிட்டு மேலும், இதனை செம்மைப்படுத்திட கேட்டுக்கொண்டார். மாப்பிளையூரணி ஊராட்சி பகுதியில், சாலைகளில் பேவர் பிளாக் அமைக்க இருக்கும் இடத்தினையும் பார்வையூட்டார். இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி துறை பொறியா...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 29.04.2022 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைகாலத்திற்குள் அனைத்தும் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும். எவ்வீத இடையூறு இல்லாமல் முழுமையாக பணிகள் நல்ல முறையில் பணி செய்திட வேண்டும் என்று ஏற்கனவே ஒப்பந்தகாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.     இந்நிலையில் மாநகராட்சிகுட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை மின் மோட்டார் அறை மற்றும் அய்யர்விளை அம்பேத்கார் நகர் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டறிந்தார்.  கவுன்சிலர் நாகேஸ்வரி, உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ்,  மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.

திமுக மாநகராட்சி வார்டு கழக தேர்தல் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் பெற்றுக் கொண்டனர்.

ஷ்யாம் நீயூஸ் 29.04.2022  திமுக மாநகராட்சி வார்டு கழக தேர்தல் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் பெற்றுக் கொண்டனர். தூத்துக்குடி திராவிட முன்னேற்றக்கழத்தின் 15வது பொதுத்தேர்தலில் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட வார்டு கழக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மாவட்ட கழகத்தின் வேட்பு மனு விண்ணப்பபடிவங்களை பெற்று முறையாக பூர்த்தி செய்து 30ம் தேதி மாலைக்குள் தலைமை கழக பிரதிநிதிகளிடம் விண்ணப்ப கட்டணத்துடன் வேட்பு மனுவை தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை கழக உத்தரவு படி தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் தெற்கு மாவட்ட திமுக பகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு 1, 2, 3, 12, 13, 14 ஆகிய பகுதிக்கு தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன...

டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஷ்யாம் நீயூஸ் 29.04.2022 டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்ததன் பேரில் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே. வெங்கடேசன் (மாவட்ட தலைவர் )தலைமை தாங்கினார் சீனிவாசன் (மாவட்ட செயலாளர் )கண்ணன் (மாவட்ட தலைவர் தென்காசி) ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார் மரகதலிங்கம் (மாநில துணைத்தலைவர் )முருகானந்தம் (மாநில துணைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள்...

அமைச்சர் கீதாஜீவனை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரி!

 ஷ்யாம் நீயூஸ் 29.04.2022 அமைச்சர் கீதாஜீவனை சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரி! சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஜூடித் ரவின் நேற்று   தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைகள் குறித்த திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் சமூகநலத் திட்டங்கள் குறித்து உரையாடினார்.

அமைப்பு சாரா தொழிலாளர் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 29.04.2022 அமைப்பு சாரா தொழிலாளர் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள்  ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில்  இ 27.4.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்டம் புல்வாவழி கிராமத்தில்  வைத்து நடைபெற்றது.  அதில் மாண்புமிகு  தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி .M.பீரித்தா தலைமை தாங்கினார். மேற்படி விழிப்புணர்வு முகாமில்  கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்கள், 100 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்  தனது தலைமையுரையில் இலவச சட்டத்திட்டத்தை பற்றியும்,  அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந...

முதல்வர் பிறந்தநாள் விழா கபாடி போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது.

ஷ்யாம் நீயூஸ் 28.04.2022  முதல்வர் பிறந்தநாள் விழா கபாடி போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது. தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் ஐக்கியம்!

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2022 தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் ஐக்கியம்! கனிமொழி எம்பியை சந்தித்து புதூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் தலைமையிலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையிலும், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து  புதூர் முன்னாள் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், 1-வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், 4வது வார்டு மாவட்ட கவுன்சிலருமான தங்க மாரியம்மாள், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சூரியகுமார் ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்

 ஷ்யாம் நீயூஸ் 27.04.2022 தூத்துக்குடி பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பு ஊசி செலுத்தாதவர்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்  தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தொற்று  இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி நாட்டுமக்கள் அனைவரும் தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.     அதன்படி தமிழகம் முழுவதும் கொரோன தொற்று கட்டுபடுத்துவது  குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ், ஆகியோர் மூலம் பல்வேறு கட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் மாநகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளின் படி அறிவிக்கப்பட்ட வயதினர்கள் இரண்டாம் கட்டமாக செலுத்த வேண்டிய தடுப்பு ஊசியை 60 வார்டுகளிலும் சுமார் 60 ஆயிரம் ...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வடிகால், தார் சாலை அமைக்க கோரி சிபி எம் கட்சி சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது*.

 ஷ்யாம் நீயூஸ் 27.04.2022 மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு வடிகால், தார் சாலை அமைக்க கோரி தூத்துக்குடி சிபி எம் கட்சி சார்பில் மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.தூத்துக்குடி மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான பால்பாண்டி நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர் மற்றும் ராஜிவ் நகர் ஆகிய பகுதிகள் 2015 முதல் ஆண்டு தோறும் மழைநீரால் கடும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக அன்னை தெரசா நகர் பால்பாண்டி நகர் மெயின் (சர்ச் அருகில்), கதிர்வேல் நகர் ( csi சர்ச் பின்புறம் ), ராஜீவ் நகர் 6 வது தெரு, ராஜீவ் நகர் 9 வது தெரு (பிள்ளையார் கோவில் அருகில் ), ராஜீவ் நகர் 10 வது, 11 வது தெரு, அன்னை தெரசா நகர் 2 வது மற்றும் 3 வது தெரு, பால்பாண்டிநகர் 5 வது தெரு, புஷ்பா நகர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் மழைநீர் தேங்குகிறது. இந்த சாலைகள் ஏற்கனவே பள்ளமான சாலையாக உள்ளது இந்த சாலை தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை மழைக்காலத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் போது பழுதாகி விடுகிறது இதனால் பொத...

சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 26.04.2022 சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நாமக்கல் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலாவதாக சென்னையில் வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்து, கொரோனாவுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் சேமநல நிதியை வழங்கினார்.     ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பொறுப்புக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்கிறார் எனவும் தான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய இருப்பதாகவும் குறிப்பி...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. -----------------

ஷ்யாம் நீயூஸ் 25.04.2022 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மதுரை அச்சம்பத்தில் இயங்கிவரும் மது இன்ஸ்டிடூட் ஆப்மெடிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனமானது மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் பரிந்துறையின்படி மதுரையில் தபால்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுஸ் அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க MIMS நிறுவனத்தின் இயக்குநர் மரு.வெ.பரத் மற்றும் நேச்சுரோபதி மற்றும் யோகாத்துறைத் தலைவர் மரு.மாலினி SD. தலைமையில் மரு.N.சங்கரசுப்பிரமணியன்,மரு.ப.லக்ட்சயா,மரு.ஜெ.லோகநாதன்,மரு.சு.பிரதீபா,மரு.சொ.ஜெயபாலன் மற்றும் மரு.இளங்கோவன் ஆகியோர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி,காந்தி மீயூசியம்,மீனாட்சியம்மன் கோவில்,ஆர்.எம்.எஸ் தபால்நிலையம்மற்றும் டி.எம்.எஸ் தபால் நிலையம் ஆகிய இடங்களில் யோகா வகுப்புகள் நடத்தினார்கள்.தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஆரோக்கிய பழம்  கூறும்போது இவர்களின் சுயநலமில்லாத மக்கள் சேவையை பாராட்டுகிறேன், மேலும் இதுபோன்ற மக்கள் பணியை, மக்கள் நல பணியை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும்...

புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 25.04.2022 புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக  முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. புன்னைக்காயலில் பிறந்து தஞ்சை மறைமாவட்டக் குருவாகப் பணியாற்றும் அருள்முனைவர் அமுதன் அடிகளின் குருத்துவப் பொன் விழா, புன்னைக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோவின் குருத்துவ வெள்ளி விழா, எழுத்தாளர் நெய்தல் யூ அண்டோ எழுதிய அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக, 23.4. 2022 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிவகங்கை மேனாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார்.  இரு அருள்பணியாளர்களின் பணிகளை நினைவுகூர்ந்து அருள்பணி பென்சன், அருள்பணி இரவீந்திரன் பர்னாந்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூலை மேதகு ஆயர் சூசைமாணிக்கம் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். நூலை அருள்பணி சகாயம் பர்னாந்து, அருள்பணி செல்வன் பர்னாந்து, அருள்பணி சுதர்சன் பர்னாந்து ஊர்த்தலைவர் அமல்சன் பீரிஸ், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மிக்கேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நூலை ஆழி புத்திரன் அறிமுகம் செய்து பேசினார். எழுத்தாளர் நெய...

தூத்துக்குடியில் சாலை விழிப்புணர்வு கலெக்டர் ,எஸ்.பி, மேயர், ஆணையர் தொடங்கி வைத்தனர்.

 ஷ்யாம் நீயூஸ் 25.04.2022 தூத்துக்குடியில் சாலை விழிப்புணர்வு கலெக்டர் எஸ்.பி மேயர் ஆணையர் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி சாலை விழிப்புணர்வு குறித்து போக்குவரத்து முககவசம் அணிதல் செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தில் செல்லாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குரூஸ்பர்னாந்து சிலை முன்பு நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி. பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் விழிப்புணர்வை வாகனஓட்டிகளுக்கு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் போக்குவரத்து வட்டார அலுவலர் விநாயகம், ஆய்வாளர் பெலிக்ஸ், தாசில்தார் செல்வகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கட், பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்  ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

 தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்  ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சியில் மலேரியா தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டணர் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாரூஸ்ரீ முன்னிலையில் மலேரியா நோய் இல்லாத நாடு என்ற இலக்கினை அடைவதற்கு அனைவரும் பாடுபடுவோம். என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா, உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், அதிகாரி தனசிங், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவிடம் தூத்துக்குடி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

ஷ்யாம் நீயூஸ் 25.04.2002  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவிடம் தூத்துக்குடி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிக்கு பொறுப்பேற்று பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆசியுடன் சென்னையில் உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், முன்னிலையில் சந்தித்து வளர்ச்சி நிதி வழங்கி வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகுசிறப்பாக நடந்தது.

 ஷ்யாம் நீயூஸ் 25.04.2022 தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகுசிறப்பாக நடந்தது. தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தூத்துக்குடி டூவிபுரம் சேகர தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தாளாளர் ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் தலைமை வகித்தார்.  தூத்துக்குடி ஊரக வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், ஜெசுராஜன் செல்வக்குமார், கீதா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர்(பொறுப்பு) சார்லஸ், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்றார். ஆசிரியை பெல்சிபாய் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், சண்முகையா எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில், பள்ளி தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் பேசியதாவது, தூத்துக்குடி&நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட இந்த பள்ளியை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக நாங்கள் நடத்தி வருகிறோம். இதற்கு திருமண்ட...

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!

 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு! உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து அமைச்சர் தோட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி,மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழக மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது.  தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக உழைக்கின்ற முழு நேர முதல்வராக செயல்பட்டு வருகிறார். நாள் ஒன்றுக்கு24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார், அதனால்தான் தமிழகம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதைப் போல நமது தொகுதி எம்.பி.கனிமொழி மக்களோடு மக்களாய் இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். எந்த நேரத்திலும் தொகுதி மக்கள் அவரைச் சந்திக்கலாம். அவரிடம் தொகுதி தேவைகள் பற்றிப் பேசலாம். இப்படி பழகுவதற்கு எளிமையான எம்.பி.யை நாம் இதுவரை பார்திருக்கவே முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்றும் உறுத...

முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய தூத்துக்குடி பர்னிச்சர் பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் முடிவு!

 ஷ்யாம் நீயூஸ் 24.04.2023 முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய தூத்துக்குடி பர்னிச்சர் பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் இடத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கூட்டம் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் திருநங்கைகள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கீழ அழகாபுரி தலைவர் வக்கீல் மாடசாமி, உள்பட பலர் ஊராட்சி வளர்ச்சிகள் குறித்து கோரிக்கைகள் எழுப்பினார்கள். அதற்கு கிராமநிர்வாக அலுவலர் விக்னேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை துறை அதிகாரி மீனாட்சி, ஆகியோர் பதிலளித்தனர். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய பர்னிச்சர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள 59 கிராம மக்களுக்கும் முன் உரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் அனைத்து பகுதிகளுக்க...

தூத்துக்குடியில் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை*

 ஷ்யாம் நீயூஸ் 24.04.2022 தூத்துக்குடியில் மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கும் ஊழியர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! தூத்துக்குடி மாவட்ட  நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்திற்குள்  கிரேட் காட்டன்ரோடு கடை மற்றும் லயன்ஸ்டவுன் 2ம் நம்பர் கடை ஆகிய இரண்டு ரேசன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் அரசு ரேஷன் கடையில் உள்ள பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது  இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கிரேட் காட்டன் ரோடு  கடையில் சுயம்புலிங்கம் இதேபோல் லைன்ஸ்டவுன்  இரண்டாம் நம்பர் கடையில் சரவணகுமார்  ஆகிய இரு கடை பணியாளர்கள் மகேஸ்வரி மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் மூலம் இரு சக்கர வாகனத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி பருப்...

தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை.

 ஷ்யாம் நீயூஸ் 23.04.2022 தூத்துக்குடியில் ரூபிக் கன சதுரங்கள் மூலம் " பள்ளி மாணவர் தேசியக்கொடி வடிவத்தை குறைந்த நேரத்தில் உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனை. தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கி வேர்ல்டு ஐகான் அவார்டு சாதனையை நிகழ்த்தினர். தூத்துக்குடி அருகே தனியார் பள்ளியில் வேர்ல்ட் ஐகான் அவார்ட் சாதனைக்கான ரூபிக் கன சதுரங்கள் மூலம் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி வடிவத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில், சென்னை ஸ்பா ஜீனியர் கல்லூரி பள்ளியை சார்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவன் சபரீஷ் தக்‌ஷன் 25 ரூபிக் கன சதுரங்களை (3 X 3 X 3 ) 16.36 நொடியில் செய்து உலக சாதனை புரிந்துள்ளார் இதைப்போல தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவன் ரோஷன் 5 ரூபிக் கன சதுரங்களை 9.11 நொடியில் செய்து  தேசியக்கொடி வடிவத்தை உருவாக...

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 23.04.2022  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் திறப்பு விழா சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் INTUC மாநில அமைப்பு செயலாளர் K.பெருமாள்சாமி தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ்  திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்குமுன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்  டேவிட் பிரபாகரன்,  அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவர் அருள்வளன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ்  மேற்கு மண்டல தலைவர் P. செந்தூர் பாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,மாநகர செயலாளர் இக்னேஷியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.மாநில பேச்சாளர் அம்பிகாபதி வெள்ளப்பட்டி ஜேசுதாசன்,  INTUC முனியசாமி, பேரையா,மீனவர் அணி மிக்கேல் குரூஸ், J. நேரு கிழக்கு மண்டல துணை தலைவர் N. சேகர், F. சேகர், கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ், C.நம்பிசங்கர் A.D. தனசேகரன், நாராயணன் , வார்டு தலைவர்கள் முத்துராஜன்  ஜான் வ...

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு

ஷ்யாம் நீயூஸ் 23.04.2022  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு. தூத்துக்குடி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் திமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று பணி செய்து வருகிறார். இந்நிலையில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணிய கோரிக்கை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி பதிலுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி முதலைமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் சுதன்கீலர் உடனிருந்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தாமதமாக நடைபெற்ற பணிகளை மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவாக பணிகள் ...

பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா!

 ஷ்யாம் நீயூஸ் 23.04.2022 பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா! பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை பொருள் உற்பத்தியாளர் குழுவினருக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான பயிற்சி முகாம்தொடக்க விழா நடைபெற்றது. மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின், மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கடனுதவி பெற்ற பனை தொழிலாளர்கள் சுய உதவி குழு பெண்  பயனாளிகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் சமுதாய கூடத்தில் வைத்து  தொடக்கவிழா நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ராயப்பன் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில தலை...

தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளரை தீயணைப்புபடையினர் மீட்டனர்.

 ஷ்யாம் நீயூஸ் 21.04.2022 தூத்துக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன மேலாளரை தீயணைப்புபடையினர் மீட்டனர். தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி மெயின் ரோட்டில் பிரபல தனியார் நிறுவனம்  அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி(CEO)யான கேரளா திருச்சூரை சேர்ந்த ரூபினோ ஜோஸ்(வயது35)  நேற்று மாலை  நிறுவனத்தில்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிறுவன வளாகத்திலுள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்புப்படையினர் நிலைய அலுவலர் ஜோ சகாயராஜ் தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  ரூபினோ ஜோஸை  பத்திரமாக மீட்டனர்.  அதனைத்தொடர்ந்து அவருக்கு  மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் மாவட்ட அதிகாரி ரதிதேவி வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ் 21.04.2022 பூமி வெப்பமயமாதல் தடுக்க மரங்களை நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் மாவட்ட அதிகாரி ரதிதேவி வேண்டுகோள். மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் லீடு தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பூமி பாதுகாப்பு  தினவிழாவில் மரங்கள் நட்டு காடுகளை வளர்க்க வேண்டும் என மாவட்ட அதிகாரி  ரதிதேவி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.               தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.             நிகழ்ச்சிக்கு மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர்  எஸ் பானுமதி முன்னிலை வகித்தார். முன்னதாக தையல் பயிற்சி மாணவி செல்வி. மெபிலா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூக நலன் மற்...

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 21.04.2022 சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தூத்துக்குடி தமிழக முதலமைச்சராக மு.க..ஸ்டாலின் பதவியேற்றபின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஓவ்வொரு துறை அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரண்டாவது முறையாக தனது துறையின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்து கேள்வி பதிலுக்கு பின் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக தனது துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் கீதாஜீவனை சமூக நலத்துறை இயக்குநர் மற்றும் செயலாளர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, கலை...

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது நிர்வாக அதிகாரி தகவல்!

ஷ்யாம் நீயூஸ் 21.04.2022  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 80 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது நிர்வாக அதிகாரி தகவல்! தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5×250(1050) மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் சூரிய மின்சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகமாக கிடைப்பதால் பகல் நேரங்களில் அனல் மின் உற்பத்தி குறைவாகவும் மாலை நேரங்களில் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது இன்றைய நிலவரப்படி மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 80 ஆயிரம் டன் கையிருப்பு உள்ளது என்றும் அனல் மின் நிலைய நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நீதிபதியின் புதுமையான தீர்ப்பு. இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு.

 ஷ்யாம் நீயூஸ் 21.04.2022 தூத்துக்குடி மாவட்ட நீதிபதியின் புதுமையான தீர்ப்பு. இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு. தட்டார்மடத்தை சேர்ந்த மூன்று நபர்கள் சண்முகநாதன், இசக்கிமுத்து, பொன்சிங் ஆகியோர் தட்டார்மடம் வியாபாரிகளிடம் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் தட்டார்மடம் மெயின் ரோட்டில் இருந்த 20 வருட பழமையான மரம் ஒன்றை வெட்டிவிட்டனர் இதை தட்டி கேட்ட வியாபாரி சங்கத்தின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சண்முகநாதன் இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சாத் தான்குளம் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளிவந்த நிலையில் பொன்சிங் என்பவரின் முன் ஜாமின் மனு மாவட்ட அமர்வு நீதிபதி முன்பு 19.4.22 அன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் மரத்தை வெட்டி சேதப்படுத்திய நபருக்கு ஜாமின் வழங்க ஆட்சேபனை செய்தார் மேலும் முன்ஜாமீன் வழங்கும்பட்சத்தில் மரம் நட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு மாவட்ட நீதிபதி  சுமதி  பொன்சிங் ஒரு மாதத்திற்குள் தட்டார்மடம் ஊரில் பத்து மரங்களை நடவேண்டும் என்று உத்தரவிட்டார்.. ...

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என டாஸ்மாக் ஏஐடியுசி சங்கம் தெரிவித்துள்ளது .தூத்துக்குடியில் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெறுகிறது

 ஷ்யாம் நீயூஸ் 20.04.2022 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என டாஸ்மாக் ஏஐடியுசி சங்கம் தெரிவித்துள்ளது .தூத்துக்குடியில் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெறுகிறது  வரும் 25ம் தேதி டாஸ்மாக் ஏஐடியூசி மற்றும் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்கள்  சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்க உள்ளனர் கடந்த 19 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மீண்டும் கடையில் பணியமர்த்த வேண்டும் பணி ஒரு எழுத்தர் ஓட்டுனர பணிக்கு விரும்பும் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும் கேரளாவை போன்ற நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் மற்றும் முழுமையான கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் என்றும் மற்றும் பல கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஏஐடியுசி பணியாளர் சங்கம் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற உள்ளதாக த...

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

 ஷ்யாம் நியூஸ் 20.04.2022 தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி அதிமுகவின் உட்கட்சி அமைப்புத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஏப் 16ம் தேதி அதிமுக 3ம் கட்ட அமைப்பு தேர்தல் தனியார் ஹோட்டலில் வைத்து மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணமுரளி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தி அதன் விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தேர்வு செய்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தனர். அதன்படி தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி செயலாளராக பொன்ராஜ், தெற்குப் பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் ராஜா, மத்திய வடக்கு பகுதி செயலாளராக ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி செயலாளராக நட்டார் முத்த...

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு நடைபெற்றது

 ஷ்யாம் நியூஸ் 19.04.2022 தூத்துக்குடி முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமி சந்திப்பு நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி  மேயர்  ஜெகன் பெரியசாமியை முத்தம்மாள் காலனி நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். நலசங்கத்தின் சார்பாக  மரியாதை நிமித்தமாகவும்    முத்தம்மாள் காலனியில்  அடிப்படை வசதிகள்  குறித்தும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.குறிப்பாக  5வது தெரு கிழக்கு மற்றும மேற்கு 9வது தெரு 10 வது  தெரு 6வது  குறுக்கு தெரு 2வது தெரு குறுக்கு ஆகிய தெருக்களில்  தார் சாலைகள் அமைக்கப்படவேண்டும்  என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.. இதற்கு பதில் அளிக்கும்போது  பாதாள சாக்கடை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும் .1வருட காலத்துக்குள்  முடிவடையும்  என மேயர் பதில் அளித்தார்.மழை நீர் தேங்கியுள்ள இடங்களை கண்டறிந்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார்.இந்த  நிகழ்வில்   நலச்சங்கத்தின்  நிர்வாகிகள்  C.தங்கராஜா  தலைவர்  மற்றும் C.சண்முகசுந்தரம்  ...

மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை மோதல் - சரமாரி தாக்குதலால் பக்தர்கள் முகம் சுழிப்பு

 ஷ்யாம் நியூஸ் 19.04.2022 மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை மோதல் - சரமாரி தாக்குதலால் பக்தர்கள் முகம் சுழிப்பு    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது.   சித்திரை பௌர்ணமி தினத்தையொட்டி வரதராஜ பெருமாள் பாலாற்றங்கரையில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி கைகலப்பாக மாற, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.    இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல வடகலை தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. (நன்றி நக்கீரன்)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சாலை பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு ஆட்சியர் கலந்து கொண்டார்

ஷ்யாம் நியூஸ் 19.04.2022 தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சாலை பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு ஆட்சியர் கலந்து கொண்டார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.04.2022) சாலை பாதுகாப்பு இயக்க விழிப்புணர்வு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, நம் பள்ளி நம் பெருமை ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர், வட்டாட்சியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி திமுக ,அதிமுக வேட்பாளர் மீது பாஜக வழக்கு. 

ஷ்யாம் நியூஸ் 19.04.2022 தூத்துக்குடி மாநகராட்சி திமுக ,அதிமுக வேட்பாளர் மீது பாஜக வழக்கு.  தூத்துக்குடி மாநகராட்சி  39வது வார்டு திமுக உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளர் மீது பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது.  தூத்துக்குடி மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் திமுக சார்பில் சுரேஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வார்டில் அதிமுக வேட்பாளராக திருச்சிற்றம்பலம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கட்சியை சேர்ந்த உஷாதேவி உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.  இந்த நிலையில் சுரேஷ்குமார் தனது வேட்பு மனு தாக்களின் போது அளித்த பிரமாண பத்திரத்தில் பல தவறான தகவல்களை சொல்லி விட்டதாகவும், பல குற்ற நடவடிக்கைகளை மறைத்து உள்ளதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி 39 வார்டு பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளரும், மத்திய அரசு வழக்க...

தூத்துகுடியில் ஒன்றிய அரசை கண்டித்து சிபி எம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஷ்யாம் நியூஸ் 19.04.2022 தூத்துகுடியில் ஒன்றிய அரசை கண்டித்து சிபி எம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஹிந்தி எதிர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியில் கண்டன  ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு  சிபி எம் மாவட்ட குழு உறுப்பினர்   எம்எஸ். முத்து தலைமை வகித்தார்.சிபி எம் மாவட்ட செயலாளர் கே.பி ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சங்கரன் , மாவட்டக்குழு உறுப்பினர் மாரியப்பன் மாநகர் குழு உறுப்பினர்கள்ஆறுமுகம், காஸ்ட்ரோ, முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், குமாரவேல், மற்றும் ஆறுமுகம்,பெருமாள், ஆனந்த், பூவலிங்கம்.அலாசியஸ்.முருகன்,டென்சிங்,கிஷோர், நாகராஜ் ,உட்பட பலர் கலந்து கொண்டனர்.