ஷ்யாம் நியூஸ்
07.09.2022
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு இருக்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி மழைகாலத்திற்கு முன்பாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி பண்டுக்கரை சாலையில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப்பணிகள் முடிக்கப்பட்ட பகுதிளையும், முடியாமல் இருக்கும் பகுதிகளையும், கருத்த பாலம் அருகில் ஆரம்பமாகப் போகும் புதிய கான்க்ரீட் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மாநகராட்சி உதவி பொறியாளர் காந்திமதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மாநகராட்சி கவுன்சிலர் பொன்னப்பன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஷ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.