கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
ஷ்யாம் நியூஸ்
19.09.202
கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டிலிருந்து நடைபெற்ற 9 மைல் தூரம் நடைபெற்ற 11 ஜோடி பெரிய மாட்டுவண்டி போட்டி, 7 மைல் தூரம் நடைபெற்ற 22 ஜோடி சிறிய மாட்டுவண்டி போட்டி, 6 மைல் தூரம் நடைபெற்ற 46 ஜோடி பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சீறி பாய்ந்து வந்த மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசுகளும் கோவிலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோவில் தலைவர் மாடசாமி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் சின்னமுத்து, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, திமுக கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, காமராஜ், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்;சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மெடிக்கல் விஜயகுமார், கௌதம், ஆறுமுகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாட்டுவண்டி போட்டியையொட்டி தாளமுத்துநகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.