ஷ்யாம் நியூஸ்
17.09.2022
பெரியாரின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி ஆதிதமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இன்று தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமூக நீதி நாளாக அறிவித்தார் அன்று முதல் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது பெரியாரின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு ஆதி தமிழர் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் செயலாளர் மு.ஊர் காவலன் ,மாநில ஊடகப் பிரிவு செயலாளர் ஆற்றலரசு, அகரம் சத்தியா, மாவட்ட துணைச் செயலாளர் சித்திரவேல் ,மாவட்ட பொருளாளர் இளஞ்சேகரன், மாவட்ட இளைஞரணி பெ அன்பரசு, தென்மண்டல அமைப்பாளர் க.வே சுரேஷ் வேலன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சக்தி சேகுவாரா மற்றும் பல ஆதித்தமிழர் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.