ஷ்யாம் நியூஸ்
12.09.2022
தூத்துக்குடியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தி;ட்டம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு படி தூத்துக்குடி புனித பிரான்;சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ரிக்டா 245 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது உள்பட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் சிவ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்;சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி 65 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியாகள் கலந்து கொண்டனர்.