ஷ்யாம் நியூஸ்
03.09.2022
மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் இந்திராசக்தி விநாயகர் கோவில் 32ம் ஆண்டு சதூர்த்தி விழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டில் 30 ஜோடிகள் கலந்து கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியை எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாநகராட்சி குப்பை கிடங்கு வரை சென்று திரும்பிய 30 ஜோடிகளில் வெற்றி பெற்ற புதூர் பாண்டியாபுரம் ஜோடி முதல்பரிசும், அரசடி ஜோடி இரண்டாம் பரிசும் பெற்றது. மேலும் 3 ஜோடிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி தர்மலி;ங்கம், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, இந்திராநகர் பகுதி இளைஞர் அணி தலைவர் பழனிமுத்துமாடசாமி, ஊர் நிர்வாகிகள் தர்மராஜ், தங்கராஜ், ஆறுமுகச்சாமி, மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.