ஷ்யாம் நியூஸ்
10.09.2022
தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாட சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் பெரியாகிபுரம் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி திருக்கோவில் தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளத்தில் 52 செண்டு சுடலமாடசாமி சுவாமி சக்தி பீடமாக இருந்து பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இக்கோயிலின் புரனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. உச்சிக்கால பூஜை மற்றும் தீபா ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கோரம்பள்ளம் சுற்றியுள்ள 32 கிராம ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சுடலைமாடசாமியின் ஆசி பெற்றனர். அதன் பின் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பெரியநாயகிபுரம் பொதுமக்கள் சார்பாக ஊர் தலைவர் மணிகண்டன் மற்றும் சுடலைமாட சுவாமி கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.