ஷ்யாம் நியூஸ்
13.09.2022
தொல். திருமா தூத்துக்குடி வருகை !அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடியின் மையப்பகுதியில் தமிழ் சாலையில் சட்டமேதை அம்பேத்கார் திருஉருவ சிலையை நிறுவி நந்தமிழர் அமைப்பினர் பராமரிப்பு செய்து வருகின்றனர். தற்போது அம்பேத்கர் சிலை மறு சிறுமைப்பு செய்யப்பட்டு பாராளுமன்றம் வடிவிலான கட்டட அமைப்பை உருவாக்கி பாராளுமன்றத்தின் மையப் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் நிர்ப்பது போன்று அம்பேத்கரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது ஏழரை அடி உயரம் 650 கிலோ எடை கொண்ட இந்த திருவுருவச்சிலை 9 லட்சம் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது .அம்பேத்கரை முழுமையாக படித்தவரும் அம்பேத்கரின் நூல்களை முழுமையாக படித்தவரும் அம்பேத்கரின் கொள்கையை முழுவதுமாக பின்பற்றி வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் வரும் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்க தூத்துக்குடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி தமிழக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன் பனையூர் பாபு ,ஆளூர் ஷாநவாஸ்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் பின் மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகின்றனர் இந்த நிகழ்ச்சியில் 3000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அம்பேத்கரின் சிலையை பராமரித்து வரும் நந் தமிழர் அமைப்பினர் தெரிவித்தனர