ஷ்யாம் நியூஸ்
29.09.2022
மாப்பிள்ளையூரணியில் பெரிய கம்மா தூர்வாரும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி தமிழக அரசு பேரூராட்சி ஊராட்சி பகுதிகளிலுள்ள பெரிய சிறிய குளங்கள் அனைத்தையும் மழைகாலத்திற்கு முன்பு முழமையாக செய்ய வேண்டிய பாராமரிப்பு பணிகள் தூர்வாறும் பணிகளை மேற்கொண்டு அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் பொதுமக்கள் குடிப்பதற்கும் மற்ற உபயோகத்திற்கும் ஐந்தறிவு ஜீவன்கள் தாகம் தீர்ப்பதற்கும் தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்க வழிவகை செய்திட வேண்டும் என்று கூறியுள்ளப்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பி;ள்ளையூரணி ஊராட்சியில் உள்ள பெரியகம்மா தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்;நடைத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியிலுள்ள பெரியகம்மா மற்றும் சிறியகம்மா ஆகிய கம்மாக்கள் தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரு கம்மாக்களுக்கும் சேர்த்து 48லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி தொடக்க விழா பூஜையை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாப்பிள்ளையூரணி ஊர்தலைவர் ராமமூர்த்தி, மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.