ஷ்யாம் நியூஸ்
17.09.2022
ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் கிப்சன், வஉசி பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ், திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் , மேல்நிலை பள்ளி மேலாளர் பிரேம்குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளரும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வட்டக்கோவில் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.