தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி
ஷ்யாம் நியூஸ்
15.09.2022
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு 14 கோடி ஓதுக்கீடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகள் மற்றும் ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் ‘மாஸ் கிளினிங்’ பணிகளும் நடைபெறுகிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் சிறுமுட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணிகளை அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதியும், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் திட்டுக்களை முழுமையாக அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடி பிரதான சாலையான 3வது மைல் மேம்பாலத்தில் துவங்கி தமிழ்சாலை, வ.உ.சி.சாலை வழியாக சப்கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2.9.22 அன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திலின் படி நகராட்சி நிர்வாகத்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது நகராட்சி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவிடம் தூத்துக்குடி மாநகரில் தேவைக்காக சில கோரிக்கைகளை வைத்ததின் படி முதற்கட்டமாக சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு 14 கோடி ஓதுக்கியுள்ளார். ஓதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நகர் புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.