மாப்பிள்ளையூரணி கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
ஷ்யாம் நியூஸ்
10.09.2022
மாப்பிள்ளையூரணி கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட மாதாநகர் சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதல்படி மாதாநகர் எம்எஸ்டி கபாடி குழுவின் 3ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி கோவில் மைதானத்தில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதி போட்டியில் திருநெல்வேலி பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல்பரிசும், தென்காசி ஜிபோர்ட்ஸ் அணி இரண்டாவது பரிசும், மாதாநகர் எம்எஸ்டி கபாடி குழு மூன்றாவது பரிசும், மதுரை சிபிஆர் கபாடி குழு நான்காம் பரிசு உள்பட வெற்றி பெற்ற 8 அணிகளுக்கு பரிசு கோப்பையும் பரிசு தொகையும் சிறப்பாக விளையாடியவர்களுக்கு ஊக்க தொகை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் வழங்கினார்.
விழாவில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாணவரணி துணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜேஸ்பின் மேரி, துணைச்செயலாளர்கள் ஜெஸிந்தா, கலா, ஊராட்சி மன்ற துணைத்தலைவி தமிழ்ச்செல்வி, கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான வசந்தகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, உமாமகேஸ்வரி, தொழிலதிபர் ரத்தினராஜ், சந்தனராஜ், கருணாமூர்த்தி, சரவணக்குமார், வக்கீல் முத்துகுமார், பொன்ராஜ், சாமுவேல், கருப்பசாமி, வக்கீல் பொன்செல்வன், வைரமூர்த்தி, பொன்ராஜ், மாரியப்பன், ஒன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், ராஜேந்திரன், அமைச்சர் உதவியாளர் கபாடி கந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.