ஷ்யாம் நியூஸ்
06.09.2022
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு இம்பா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வஉசி 151வது பிறந்தநாளை முன்னிட்டு பிள்ளைமார் முதலியார் சமுதாய கூட்டு இயக்கமான மாவட்ட இம்பா சார்பில் வஉசி சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து 151 பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோலப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். 151 பெண்களுக்கு மாநில மகளிர் அணி செயல்தலைவர் பேராசிரியர் வேலம்மாள், மாவட்ட தலைவர் ராஜா, ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அருண், துணைத்தலைவர் செந்தில்குமார், துணைச்செயலாளர்கள் சரவணன், முருகானந்தம், பாக்கியராஜ், பார்த்தசாரதி, சௌந்தர்ராஜன், இணைச்செயலாளர் பொன்லட்சுமணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருச்சிற்றம்பலம், மகளிர் அணி செயலாளர் சொர்னலதா, துணைதலைவர்கள் செல்வி, சோமசுந்தரி, துணைச்செயலாளர் சிவகாமி, நிர்வாகிகள் குற்றாலிங்கம், சுப்பிரமணி, கணேஷ், விக்ணேஷ், இசக்கிராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.