ஷ்யாம் நியூஸ்
02.09.2022
மாப்பிள்ளையூரணி காமராஜ் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குப்பை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுசீலா தேவி முன்னிலை வகித்தார். நம்ம ஊரு சூப்பர் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்தல் பிளாஸ்டிக் நெகிழிகள் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு தூய்மை பாரத இயக்க மாவட்ட பயிற்சியாளர்கள் அங்காளஈஸ்வரி, ஆரோக்கிய மேரி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, தூய்மை பாரத இயக்க வட்டார ஓருங்கிணைப்பாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன், ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு குப்பை சார்ந்த பொருட்களை மூன்று வகையான குப்பை பாக்ஸ் வைக்கப்பட்டு மாணவ மாணவிகளிடம் எந்த கழிவுபொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பை உபயோகப்படுத்தப்படாத நெகிழிகள் ஆகியவற்றை குப்பை பாக்ஸ்களில் மாணவ மாணவிகள் உபயோகப்படுத்தும் முறைகுறித்து பயிற்சி எடுத்து கொண்டனர்.
பின்னர் பள்ளியிலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை மார்க்கமாக சென்று மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட திடக்கழிவு வேளாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் நிறைவு பெற்று இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து அதிகாரிகள் மாணவ மாணவிகளிடம் விளக்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயலாளர் நரேன் தர்மராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், தூய்மை காவலர்களின் ஓருங்கிணைப்பாளர்கள் தூய்மை காவலர்கள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றியுரையாற்றினார்.