ஷ்யாம் நியூஸ்
12.09.2022
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி சங்க கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சி பி ஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க கூட்டம் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் ஏ ஐ டி யூ சி நிர்வாகி காளிமுத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று வருடங்களாக கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களை மீண்டும் கடையில் பணியமர்த்திய மேலாண்மை இயக்குனர் , மண்டல மேலாளர் அதற்கு முயற்சி செய்த மாநில செயலாளர் டி.தனசேகரன் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன், ஏ ஐ டி யூ சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
டாஸ்மாக் பணியாளருக்கு போனஸ் 40% ஆகவும் மற்றும் பண்டிகை கால சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு ஏற்ப பணியாளர்களை பணி நிரவல் செய்யவும், இறந்த பணியாளர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்கவும், குறைந்த விலை மது புட்டிகளை அதிகளவு கடைகளுக்கு அனுப்பி வைக்கவும், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் ,13. 9 .2022 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிக பணியாளர்கள் கலந்து கொள்ளவது,வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் நெல்லையில் நடைபெறும் மாநில ஏ ஐ டி யூ மாநில மாநாடு சிறப்பாக நடைபெற உழைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், தேவசகாயம் ,குமாரவேல் மாணிக்கம், மாரியப்பன் ,ராஜபாண்டி, முருகன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்