ஷ்யாம் நியூஸ்
28.09.2022
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேரனுக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து
தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருனாநிதி தலைமையிலான அமைச்சரவையில் 2006ம் ஆண்டு 11ம் ஆண்டு வரை சமூக நலத்துறை அமைச்சராக கீதாஜீவன் பணியாற்றினார். தொடர்ந்து பொதுவாழ்வில் 26 ஆண்டுகள் பணியாற்றி வரும் கீதாஜீவன் தற்போது வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வரும் அவர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீண்டும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட செயலாளர்களில் பெண்சிங்கம் என்று நிர்வாகத் திறமை உள்ளவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாநகர பகுதியில் உள்ள வட்டச்செயலாளர்கள் மற்றும் இதர பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி கீதாஜீவனை போல் பல மாவட்ட செயலாளர்கள் உருவாக வேண்டும். காரணம் எந்த சலசலப்பு இல்லாமல் பொறுப்புகள் எல்லோருக்கும் வழங்கப்பட்டு அரவணைத்து பணியாற்றி வருகின்றார். என்று புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் மகளுக்கு சில தினங்களுக்கு முன்பு பேரன் பிறந்துள்ளதையடுத்து மாநில மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜீவன் ஜேக்கப், சுதன்கீலர், மற்றும் மகன் மருமகள் மருமகன் தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.